கடந்த சனிக்கிழமை வரையில் இலங்கையின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 4 ஆம் திகதி தரவுகளின்படி மொத்த சனத்தொகையில் 64.04 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது .
இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 42 இலச்சத்து 5 ஆயிரத்து 539 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது டோஸ் 73 இலட்சத்து 06 ஆயிரத்து 152 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் (5) 30,381 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தொற்று நோயியல் பிரிவு அறிக்கையின்படி கடந்த சனிக்கிழமை மட்டும் (5) பைசர் தடுப்பூசி முதலாவது டோஸ் 2 ஆயிரத்து 593 பேருக்கும், இரண்டாவது டோஸ் 6 ஆயிரத்து 281 பேரும் தடுப்பூசி பெற்றதாக தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரையில் 24 இலட்சத்து 52 ஆயிரத்து 888 பேர் பைசர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இரண்டாவது டோஸை 7 இலச்சத்து 41 ஆயிரத்து 778 பேர் பெற்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சினோபார்ம் தடுப்பூசி முதலாவது டோஸ் 786 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலாவது டோஸை பெற்ற நபர்களின் மொத்த எண்ணிக்கை 1,202,474 ஆக உயர்வடைந்துள்ளது. இத்துடன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 71 பேருக்கு செலுத்தப்பட்டதன் மூலம் இரண்டாவது தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 11 இலட்சத்து ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசி முதல் டோஸை 14 இலட்சத்து 79 ஆயிரத்து 631 பேரும், இரண்டாவது டோஸை 14 இலட்சத்து 18 ஆயிரத்து 593 பேரும் இதுவரையில் பெற்றுள்ளனர்.
அதேபோன்று மொத்தமாக மொடோனா தடுப்பூசி முதலாவது டோஸ் 8 இலட்சத்து 4 ஆயிரத்து 801 பேருக்கும், இரண்டாவது டோஸ் 7 இலட்சத்து 87 ஆயிரத்து 361 பேருக்கும் இதுவரையில் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மொத்தமாக ஸ்பூட்னிக் வீ தடுப்பூசி முதலாவது டோஸ் 1 இலட்சத்து 59 ஆயிரத்து 110 பேருக்கும், இரண்டாவது டோஸ் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 812 பேருக்கும் இதுவரை செலுத்தியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.