சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் இந்தோ திபெத் துணை ராணுவப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
நாராயண்பூர் மாவட்டம் சோன்பூர் கிராம பகுதியில் காலை நேரத்தில் துணை ராணுவப் படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலத்திற்கு அடியில் இருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அவ்விபத்தில் துணை காவல் ஆய்வாளர் ராஜேந்திர சிங் என்பவர் உயிரிழந்தார். மகேஷ் என்ற மற்றொரு வீரருக்கு காயங்களுடன் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM