தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா ராஜினாமா செய்ய முன்வந்த போதும், காரியக் கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்டனர்.
சோனியாவின் தலைமையில் நம்பிக்கை உள்ளது என்றும், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமான உட்கட்சி விவகாரங்களை தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றும் மூத்த தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்வியை ஒட்டி கூட்டப்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் 5 மணி நேர ஆலோசனை நடைபெற்றது.