
சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு கோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை கவர்ந்தது மற்றுமின்றி யூடியூபில் 160 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த அரபிக் குத்து பாடலை எழுதிய சிவகார்த்திகேயனை போனில் தொடர்பு கொண்டு விஜய் பாராட்டியுள்ளார் . பாட்டை பிரமாதமாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு அரபி மொழி கூட தெரியுமா? என தமாஷாக பேசியுள்ளார் விஜய் .