பெங்களூரு, : கர்நாடகாவில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோடைக்காலம் துவக்கத்திலேயே, கர்நாடகாவில் வெப்பநிலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. பொதுவாக மார்ச் முதல் மே வரை, கோடைக்காலம் இருக்கும். இம்முறை அதிகமான வெப்பம், மக்களை வாட்டி வதைக்கிறது. காலை 8:00 மணிக்கே, வெயில் சுடுகிறது.
ஷிவமொகா, கொப்பால், கலபுரகி, கார்வார், மாண்டியா, தாவணகரேவில், 35 டிகிரி செல்ஷியசை தாண்டி; கதக், விஜயபுரா, ஹாவேரி, சித்ரதுர்கா, மைசூரில் 32 டிகிரி செல்ஷியஸ்; பெங்களூரு, தார்வாட், விஜயபுரா, பீதர், மங்களூரு விமான நிலையத்தில், 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உள்ளது.பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் தாண்டியுள்ளது. அடுத்த மூன்று நாட்களில், வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துஉள்ளது.
பெங்களூரு, : கர்நாடகாவில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோடைக்காலம் துவக்கத்திலேயே, கர்நாடகாவில் வெப்பநிலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. பொதுவாக மார்ச் முதல் மே
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.