பெங்களூரு: இலங்கைக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பெங்களூரு டெஸ்ட் ஸ்கோர் விவரம்: இந்தியா 252, 303/9, இலங்கை 109, 208 ரங்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 107, குசால் மெண்டிஸ் 54 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4, பும்ரா 3, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.