விமான பயணத்தின்போது சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்! மத்தியஅரசு

டெல்லி: சீக்கியர்கள் விமானங்களில் கத்தி, கிர்பான் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆயுதங்கள் மட்டுமின்றி, நகவெட்டி, சிகரெட் லைட்டர் போன்ற பாதகத்திற்கு பயன்படுத்த உதவும் சிறு உபகரணங்களையும் விமானத்தில் எடுத்துச் செல்ல மார்ச் 4ந்தேதி தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சீக்கியர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவை முன்னணி சீக்கிய அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC) விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக மார்ச் 9 அன்று, SGPC தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒரு கடிதம் எழுதினார், மார்ச் 4 உத்தரவு சீக்கிய உரிமைகள் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மத்தியஅரசு, விமான போக்குவரத்துதுறை அமைச்சம் ஆலோசித்தது.  இதையடுத்து,  விமானங்களில் கிர்பான் எனப்படும் கத்தியை எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகவும், சீக்கியர்களுக்கு மட்டும் கிர்பான் எடுத்துச் செல்வதில் விலக்கு அளித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சீக்கிய மதத்தில், கிர்பான், வளைந்த குத்துச்சண்டை, உடலுக்கு அடுத்ததாக அணிய வேண்டும். சீக்கியர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு மட்டும் கத்தியை கொண்டு செல்ல அனுமதி அளித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவிற்குள் இந்திய விமானங்களில் விமானத்தில் பயணம் செய்யும் போது, “ஒரு சீக்கியப் பயணியால் மட்டுமே கிர்பனை எடுத்துச் செல்ல முடியும், அந்த கத்தியின்  நீளம் ஆறு அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் மொத்த நீளம் ஒன்பது அங்குலத்திற்கு மிகாமல்,  அதாவது, கத்தியின் அளவு 22 புள்ளி 86 சென்டி மீட்டருக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும், 15 புள்ளி 23 சென்டி மீட்டருக்கு மேல் கத்தியின் கூர்மையான பகுதி அமைந்திருக்கக் கூடாது என்ற வழிகாட்டுதல்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. . “இந்த விதிவிலக்கு சீக்கிய பயணிகளுக்கு மட்டுமே மேலே கூறப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்தில் (சீக்கியர் உட்பட) மற்றும் உள்நாட்டு அல்லது சர்வதேச முனையத்தில் பணிபுரியும் எந்தவொரு பங்குதாரரோ அல்லது அதன் பணியாளரோ கிர்பானை நேரில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்,  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.