உக்ரைன் நாட்டுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், ஆயுதங்கள் தந்து உதவும்படி, சீனாவிடம் ரஷ்யா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த சில வாரங்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தின. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் முக்கிய கட்டடங்கள், குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக, உக்ரைன் அரசு குற்றம் சாட்டி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் படையெடுப்பு காரணமாக அந்நாட்டில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா,
சீனா
, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும் இதற்கு விளாடிமிர் புடின் செவி சாய்க்கவில்லை. இதை அடுத்து ரஷ்யா மீதும், அதிபர் விளாடிமிர் புடின் மீதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இந்த 2 விஷயம் சரியில்லை.. புடினுக்கு என்னமோ ஆயிருச்சு.. கிளப்பி விடும் இங்கிலாந்து!
இந்நிலையில் உக்ரைன் நாட்டுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், ஆயுதங்கள் தந்து உதவும்படி, சீனாவிடம் ரஷ்யா கேட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நிதி உதவி அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர், உக்ரைன் விவகாரத்தில் சீனாவை குறிவைத்து அமெரிக்கா தவறான நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி வருகிறது என தெரிவித்துள்ளார்.