விளையாட்டுத்துறையில் சாதிக்க விருப்பமா? தமிழக அரசின் அருமையான வாய்ப்பு

Tamilnadu Sports Hostel Admission details: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகளில் சேர்ந்து விளையாட்டுகளில் பயிற்சி பெற பள்ளி மாணவ, மாணவியர்களிடம் இருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது.

விளையாட்டுத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள் சேர்க்கைப் பெற்று பயிற்சி பெறலாம். இந்த விளையாட்டு மையங்களில் சேர்க்கைககான அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப, விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதிகள் எங்கெல்லாம் உள்ளன?

இதில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

தேர்வு எப்போது?

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 23.03.2022 அன்று 31 மாவட்டங்களுக்கும், 24.03.2022 அன்று செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், 25.03.2022 அன்று இராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் நடைபெற உள்ளது.

எந்த விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன?

மாணவர்களுக்கான விளையாட்டுகளாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்ச்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகியவை உள்ளன.

இதையும் படியுங்கள்: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மாணவியர்களுக்கான விளையாட்டுகளாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்ச்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகியவை உள்ளன.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் என்ற இணையதள முகவரியில், விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 22.03.2022

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.