ரஷ்ய-உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 19வது நாளாக ரஷ்ய படையெடுத்து வருவதற்கு மத்தியில், இன்று இரு நாட்டு அதிகாரிகளும் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுத்தை இன்றோடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாளை மீண்டும் தொடங்கும் எனவும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் Mykhaylo Podolyak இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாளை வரை பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என Mykhaylo Podolyak ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சுவார்த்தையில் எதேனும் முன்னேற்றம் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
A technical pause has been taken in the negotiations until tomorrow. For additional work in the working subgroups and clarification of individual definitions. Negotiations continue…
— Михайло Подоляк (@Podolyak_M) March 14, 2022
இன்று முன்னதாக, Mykhaylo Podolyak கூறுகையில், ரஷ்யாவும், உக்ரைனும் வெவ்வேறு அரசியல் அமைப்புகளை கொண்ட நாடுகள் காரணமாக பேச்சுவார்த்தை கடினமாக இருக்கிறது என்று கூறினார்.
உக்ரைன் தனது மக்களிடையே சுதந்திரமான உரையாடலை அனுமதிக்கிறது, அதே நேரத்தில் ரஷ்யா ‘தன் சொந்த சமூகத்தின் மீது உச்சக்கட்ட அடக்குமுறையை காட்டுகிறது என தெரிவித்திருந்தார்.
The parties actively express their specified positions. Communication is being held yet it’s hard. The reason for the discord is too different political systems. 🇺🇦 is a free dialogue within the society & an obligatory consensus. 🇷🇺 is an ultimatum suppression of its own society pic.twitter.com/O00fnCd1WP
— Михайло Подоляк (@Podolyak_M) March 14, 2022