சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ரஜினியின் ‘
தலைவர் 169′
பட அப்டேட் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
வாரிசு நடிகருடன் காதல் திருமணமா..?: உண்மையை போட்டுடைத்த மஞ்சிமா மோகன்..!
இந்நிலையில் இந்தப்படத்தில்
பிரியங்கா அருள்மோகன்
ரஜினியின் மகளாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தலைவர் 169’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கவுள்ள நடிகைக்கான தேடுதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பிரியங்கா அருள்மோகன் ரஜினியின் தங்கையாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நெல்சனின் ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா, சமீபத்தில் வெளியான சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இவர் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள ‘டான்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“எதற்கும் துணிந்தவன்” சூர்யா ரசிகர்களின் ரியாக்சன்!