தற்போது நாட்டில் போதியளவு டீசலும், பெற்றோலும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் . 34 ஆயிரம் மெற்றிக் தொன் கொள்ளவுடைய ஒரு கப்பல் தற்போது வந்துள்ளது. இதன்படி நாட்டுக்கு தேவையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மின்நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் கொள்கலன் வாகனங்களுக்காக நிவாரண வேலைத்திட்டம் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
30 வருட காலம் நிலவிய யுத்தத்தை வெற்றி கொண்டது போல தற்போதைய நெருக்கடியையும் வெற்றி கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன தெனிப்பிட்டிய அங்கு தெரிவித்தார்.
நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை நாட்டிலேயே உற்பத்தி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.