பார்த்திபனின் பட ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் மணிரத்னம்
பார்த்திபன் தான் இயக்கிய 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் மூலம் அனைவரின் பாராட்டையும், கவனத்தையும் ஈர்த்தார். இதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து இவர் இயக்கும் அடுத்தப்படத்தை புதுமுயற்சியாக ஒரே ஷாட்டில் இயக்கியுள்ளார். இரவின் நிழல் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை பார்த்திபன் அறிவித்துள்ளார். இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியிடுகிறார் என தெரிவித்துள்ளார் .