சென்னை:
இன்று நண்பகல் 12 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் அமைச்சர் துரைமுருகன் செல்வார் என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது சட்டசபையில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று தருவது குறித்து முதலமைச்சர் வலியுறுத்துவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.