நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில், தீவனப்புல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது.
தனியார் நிறுவனத்திற்கு தீவனப்புல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது லாரியின் மேல் புறத்தில் மின் கம்பி உரசியதில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது.
இதனையறியாத ஓட்டுனர் விக்னேஷ், தொடர்ந்து லாரியை ஓட்டிச்சென்ற நிலையில், தீவனப்புல் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. புகை வருவதை கண்டு லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு விக்னேஷ் இறங்கி உயிர்த்தப்பிய நிலையில் லாரி முழுவதும் தீப்பரவி எரிந்து நாசமானது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.