லெஜெண்ட் படத்தில் குத்தாட்டம் போடும் ராய் லட்சுமி
தொழிலதிர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் கதாநாயகனாக 'தி லெஜெண்ட்' எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இப்படத்தை இயக்குகிறார்கள். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்லா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, மயில்சாமி, மறைந்த நடிகர் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி இந்தப் படத்தில் ஒரு நாட்டுப்புற குத்து பாடலுக்கு கவர்ச்சியாக நடமாடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நடன பயிற்சியினை ராஜு சுந்தரம் மேற்கொண்டு வருகிறார் .