'யுத்த சத்தம் ' மார்ச் 18ம் தேதி ரிலீஸ்
கவுதம் கார்த்திக் வைத்து தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எழில். 'யுத்த சத்தம் ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைநாயகியாக சாய் ப்ரியாவும் மற்றும் நடிகர் ரோபோசங்கர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தை காவ்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் விஜய்குமரன் தயாரித்துள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரியாளர்கள் சந்திப்பில் யுத்த சத்தம் படம் வரும் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .