புஷ்பவனம் குப்புசாமி பாடலை தானே நீங்க பாத்துருக்கேங்க! அவங்க பொண்ணு பாடி கேட்டுருக்கேங்களா?

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.

குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.

மேலும் மகளின் திருமணம் அன்று நடந்த நிகழ்வுகளை அனிதா தனது யூடியூபில் நேரலையாக பதிவிட்டார். சமீபத்தில்’பல்லவி தனது கணவருடன் ப்ரீ ஹனிமூன் சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

இந்நிலையில் பல்லவி மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, மகாகவி பாரதியின் சுட்டும் விழிச் சுடரே கண்ணம்மா பாடலை, தன் சொந்த குரலில் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தமிழகத்திலேயே நாட்டுப்புற பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது புஷ்பவனம் குப்புசாமி தான்.  அவரது மகள், பல்லவி’ தனது மென்மையான குரலில்’ பாரதியின் பாடலை பாடும் வீடியோவை இப்போது அனைவரும் ரசித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.