ரூட் மாறும் நடிகை
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். வெப்சீரிஸ் மூலம் தெலுங்கிலும் கால்பதித்துள்ளார். இவரது நடிப்பில் புதுப்புது படங்கள் உருவாகி வளர்ந்து வருகிறது. வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தக்க வைப்பதிலும் போட்டி உருவானதை அறிந்த ப்ரியா பவானி சங்கர், அதிரடியாக கவர்ச்சி துாக்கலாய் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுநாள் வரை தான் நடித்து வந்த படத்திலும் சரி, அவர் பகிரும் போட்டோஷூட்டிலும் சரி துளியும் கவர்ச்சி காட்டாத இவர் இப்போது மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளார். பிரியாவின் இந்த போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கினர்.