தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு சந்தித்து பேசுகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அதுபோது முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் சந்திக்கின்றனர்.
வருகிற 18ந்தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.