பாலக்காடு : பாலக்காடு கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோயில் 108-வது ஏகாதசி உற்ஸவம் நிறைவடைந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி உற்ஸவம் மார்ச் 10ம் தேதி கொயேற்றத்துடன் துவங்கியது. கடந்த 1914-ல் செம்பை வைத்தியநாதபாகவதரால் துவக்கி வைத்த செம்பை பார்த்தசாரதி ஏகாதசி உற்ஸவம் விழா ஆண்டுதோறும் நடகிறது.
தற்போது செம்பை பாகவதரின் பேரன்களான செம்பை சுரேஷ், பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் ஏகாதசி சங்கீத உற்ஸவத்தை விமர்சியாக நடத்திவருகின்றனர். நேற்று காலை 9:00 மணிக்கு தியாகராஜ பாகவதரை நினைவூட்டும் ஊஞ்சவிருத்தி நிகழ்ச்சி நடந்தது. செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடரும், இசை கலைஞருமான மண்ணூர் ராஜகுமாரனுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனோன் தலைமையில் பஞ்சரத்னகீர்த்தனை நடைபெற்றது.
இளம் இசைக் கலைஞர் சங்கீதா ஆராதனை நடைபெற்றது. மாலை 6:45 மணிக்கு பிரபல பாடகர் ஜேசுதாஸ், அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் வாயிலாக இசை கச்சேரி நடத்தினார். இரவு 8:30 மணிக்கு விஜய் ஜேசுதாசின் இசைக் கச்சேரி நடந்தது. வயலின் சுவாமிநாதன், மிருதங்கம் ஹரி, கடம் கோவை சுரேஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
இரவு 10 மணிக்கு ஜெயனின் இசை கச்சேரி நடந்தது. வயலின் அனுரூப், மிருதங்கம் குழல்மன்னம் ராமகிருஷ்ணன், முகர் சங்கு ரமேஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.ஆறாட்டு நிகழ்ச்சியுடன் இன்று ஏகாதசி உற்ஸவம்நிறைவடைகிறது.
Advertisement