உக்ரைனில் இதுவரை 31 மருத்துவமனைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் UNICEF ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின்படி, உக்ரைனில் சுகாதாரப் பாதுகாப்பு மீதான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொடூரமான தாக்குதல்கள் நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பலத்த காயங்களை ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.