ரஷ்ய தொழிலதிபர்கள் மீது 4-வதுகட்ட பொருளாதார தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப்பான செல்சி-யின் உரிமையாளர் ரஷ்யாவைச் சேர்ந்த Abramovich உள்ளிட்ட ரஷ்ய செல்வந்தர்கள் அதிபர் புதினுடன் தொடர்பில் இருந்து கொண்டு போருக்கான நிதியுதவியை அளிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கனடா மற்றும் பிரிட்டனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்கள், ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் சார்ந்த நிறுவனங்களில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் முதலீடுகளையும் முடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.