விஜய்யின்
பீஸ்ட்
படத்திற்காகத்தான் தற்போது ரசிகர்கள் அனைவரும் காத்திருகின்றனர். வித்யாசமான டார்க் காமெடி படங்களை கொடுத்து அசத்தி வரும் நெல்சனின் இயக்கத்தில்
விஜய்
நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்ததிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
மேலும் இப்படத்தில் செல்வராகவன் நடிப்பது, படத்தின் டைட்டில், அரபிக் குத்து பாடல் என அனைத்தும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விஜய்யை பீஸ்ட் படத்துல நாம இப்படித்தான் பார்க்கப்போறோம்..!ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இதைத்தொடர்ந்து படத்தைப்பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் வேளையில் படத்தின் சில காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து படக்குழு அதிர்ச்சியடைந்தது.
இது ஒருபுறமிருக்க படத்தில் விஜய் ஒரே காஸ்ட்டுமில் தான் நடித்துள்ளார் எனவும், படத்தின் கதைக்களம் ஒரே நாள் இரவில் நடப்பதைப்போன்று உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. இதெல்லாம் உண்மையா, இல்லை வெறும் வதந்தியா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.இந்நிலையில் கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
விஜய்
இதையடுத்து படக்குழுவிடமிருந்து டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் படம் வெளியாக ஒரு மாதமே இருக்கும் சூழலில் இம்மாதம் இப்படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஆனால் அரபிக் குத்து பாடலுக்கு பிறகு படக்குழுவிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இதனால் சற்று பொறுமையை இழந்த ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்டு ஹாஷ்டாக் எல்லாம் உருவாக்கி வருகின்றனர். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களிடமும் பீஸ்ட் அப்டேட் கேட்டு வருகின்றனர். கடந்தாண்டு எப்படி அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்தார்களோ அதேபோல தற்போது விஜய் ரசிகர்களும் சேட்டு வருகின்றனர்.
பீஸ்ட்
மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜும் பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளது செம வைரலாகிவருகின்றது. விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் தற்போது கமலின்
விக்ரம்
படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.இதை நேற்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளன்று படக்குழு அறிவித்தது.
லோகேஷின் பிறந்தநாளுக்கு பல திரைபிரபலங்கள் வாழ்த்துக்களை கூறிவந்த நிலையில் இயக்குனர்
நெல்சன்
தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த லோகேஷ் நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ் என ட்வீட் செய்துள்ளார்.தற்போது இவரின் இந்த ட்வீட் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
விஜய்
மேலும் உங்கள் நெருங்கிய நண்பர் லோகேஷ் கனகராஜே பீஸ்ட் அப்டேட் கேட்டுட்டாரே இப்பொழுதாவது பீஸ்ட் அப்டேட் விடுங்களேன் என நெல்சனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!