பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளன், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜாமீன் வழங்கப்பட்டதால் கடந்த 11-ம் தேதி புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு சிறை அலுவலகத்திற்கு வரவில்லை எனக் கூறி மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாமீன் பெறுவதற்காக இன்று காலை 6.30 மணிக்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களை கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM