திருவண்ணாமலை: 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.