வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனின் மனைவி மீனா சுவாமிநாதன் சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
மீனா ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் குழந்தை பராமரிப்பு நிபுணராக இருந்தார், அவர் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தை பராமரிப்பு மேம்பாட்டுத் திட்டத்தை (ஐசிடிஎஸ்) பரிந்துரைத்த குழுவின் தலைவராகவும் இருந்தார். அவருக்கு வயது 89.
மொபைல் க்ரீச்ஸின் நிறுவனர்களில் மீனாவும் ஒருவர், டெல்லி சமூக நல வாரியத்தின் முன்னாள் தலைவர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் எமரிட்டஸ் அறங்காவலர், மகளிர் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் நிறுவன உறுப்பினர் மற்றும் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வியில், யுனெஸ்கோ மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் சர்வதேச ஆலோசகர் ஆவார்.
நாடகத் துறையிலும் பணியாற்றியவர். அவருக்கு சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்; அவரது சகோதரர் ரவி பூதலிங்கம்.
மீனா 1970 இல், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தால், பாலர் குழந்தை வளர்ச்சிக்கான ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை, 1975 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) எனப்படும் திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது, இது ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கிய பங்கு ஆகும்.
மேலும் மீனா சுவாமிநாதன் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்ததுடன், ஆசிரியர்களுக்கான மூன்று கையேடுகளையும் எழுதியுள்ளார்.
1989 இல் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு, மொபைல் பயிற்சி குழுக்களை அமைத்தது – மாநிலம் முழுவதும் பரவலாக பயணம் செய்து ஐசிடிஎஸ் முன்னணி ஊழியர்களுடன் பணிபுரிந்தது என தமிழகத்தில்’ ஒருங்கிணைந்த குழந்தை பராமரிப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
மீனா மறைவையொட்டி’ அவரது இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார்.
மேலும் மீனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மினா ஒரு சிறந்த ஆசிரியர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். பாலின சமத்துவம், பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார் என்றார்.
“பாலின சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மீனா சுவாமிநாதனின் பங்களிப்பிற்காக MSSRF அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருக்கிறது” என்று அறக்கட்டளை கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“