ரஜினிகாந்தின் மகளான
ஐஸ்வர்யா
சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான லாரன்ஸை சந்தித்தார். அப்போது தான் இயக்கியுள்ள முசாஃபிர், பயணி, யாத்ரகாரகன், சஞ்சரி ஆகிய ஆல்பங்களை லாரன்ஸிடம் காட்டியதாக தெரிகிறது.
மேலும் லாரன்ஸுடன் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த ஐஸ்வர்யா, என் அண்ணனை சந்தித்த பிறகு ஏதோ சுவாரசியமாக உள்ளது. லாரன்ஸ் அண்ணாவுடனான சந்திப்புக்கு பிறகு என் மூளை வேகமாக ஓடுகிறது. வொர்க் மோட் ஆன்… எங்கும் எப்பொழுதும் எதுவாக இருந்தாலும்! என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் லாரன்ஸ், எனது தங்கை ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் சமீபத்தில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதுபற்றி கருத்துக் கூற எனக்கு விருப்பமில்லை. அவரது சொந்த வாழ்கையை பற்றி பேச எனக்கு உரிமையும் இல்லை. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைதான் நான் பிரார்த்தனை செய்கிறேன்.. என கூறியுள்ளார்.
அந்த காசுல சாப்பிடுறீங்களே வெட்கமா இல்ல? ப்ளு சட்டையை துவைத்து தொங்கவிட்ட பாண்டிராஜ்!
ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 16 மற்றும் 14 வயதில் 2 மகன்கள் உள்ள நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்து வாழப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!