அமெரிக்கா முன்னாள் ராணுவ தளபதிகளில் ஒருவரான லெப்டினென்ட் ஜெனரல் பென்ஹோட்ஜெஸ் ரஷிய போர் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் குறைந்து விட்டன. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் மிக குறைந்து விட்டது.
இன்னமும் ரஷியாவால் குறிப்பிட்ட இலக்கை எட்ட இயலவில்லை. என்னுடைய கணிப்பு படி ரஷியாவிடம் இன்னும் 10 நாட்களுக்கு தேவையான ஆயுதங்களே உள்ளது. அதன்பிறகு ரஷியாவால் போரிடுவது கஷ்டம்.
எனவே ஒரு காலக்கட்டத்தில் உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.