டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை வரும் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கெளஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், டெல்லியில் விஜய் செளக்கிலிருந்து இந்தியா கேட் வரை ராஜபாதையுடன் சென்ட்ரல் விஸ்டா தளம் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தை வரும் மே மாதத்துக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.