காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணியையும் வழங்குவதற்கு இதன்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த விடயத்தை பாதிக்கப்பட்ட தரப்பினர் வன்மையாக கண்டித்திருந்தனர்.
என்ற போதும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.