கொரோனா தொடர் அலையின் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக திருமலை திருப்பதிக்கு வர ஏழுமலையான் பக்தர்கள அனுமதிக்கப்டவில்லை. தற்போது கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்துள்ளதையடுத்து திருமலையில் பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாள்தோறு் 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் 25 ஆயிரம் பேரும், இலவச தரிசனம் மேற்கொள்ள 30 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பல மணி நேரமோ, சமயத்தில் சில நாட்களோ நீண்ட வரிசையில் காத்திருந்தே ஏழுமலையானை தரிசிக்க வேண்டியுள்ளது.
பக்தர்களின் இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு,
திருமலை திருப்பதி
தேவஸ்தானம்,
ஐஆர்சிடிசி
உடன் இணைந்து விரைவான தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புபவர்கள்,
IRCTC
இணையதளத்துக்கு சென்று 900 கட்டணம் செலுத்து முன்பதிவு செய்து கொள்ள வேணடும்.
பகவத் கீதை படிச்சுக்கங்க.. வீட்டுச் சாப்பாடெல்லாம் தர முடியாது.. சித்ராவுக்கு “நோ”!
அவர்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை ரயில் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து கார் அல்லது வேன் மூலம் திருமலை திருப்பதிக்கு பயணிக்கும் பக்தர்கள் முற்பகல் 11 மணிக்கெல்லாம் ஏழுமலையானை தரிசித்து விடலாம். அதாவது திருமலை திருப்பதியை அடை ந்த அடுத்த ஒருமணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து விடலாம்.
உடனே சாமி தரிசனம் கிடைப்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்துக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.