நீட் விவகாரம்!: சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தமிழக ஆளுநர் ரவியை நீக்கக்கோரி திமுக எம்.பிக்கள் மக்களவையில் முழக்கம்..!!

டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஆளுநர் ரவி சட்டப்படி செயல்பட வேண்டும் எனவும் மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். தமிழக ஆளுநர் ரவி சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துவதாக திமுக குற்றம்சாட்டியிருக்கிறது. திமுக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.