Google
நிர்வகிக்கும் யூடியூப் 2022 ஆம் ஆண்டிற்கான வரைபடத்தைப் பகிர்ந்துள்ளது. இது வெளியாகவிருக்கும் பல புதிய அம்சங்களை வெளிப்படுத்தியது. இதில் அதிக நபர்களைக் கொண்டு குழுவாக நேரலை நடத்தும் திட்டத்தையும் செயல்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், தற்போது அந்த வரைபடத்தில் உள்ள புதிய அம்சத்தை
YouTube
சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தை இணையத்தில் யூடியூப் பார்ப்பவர்கள் அனுபவித்திருக்க முடியும். ஆம், YouTube Transcription அம்சம் விரைவில் யூடியூப் ஆப் பயனர்களுக்கு கிடைக்க உள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகிய இரு இயங்குதளத்திற்கான சோதனையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடியும்போது, அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக இணையத்தில் உலாவ சிறந்த VPN-கள்?
யூடியூப் டிரான்ஸ்கிரிப்ஷன் என்றால் என்ன?
ஒரு நீண்ட வீடியோவை நீங்கள் காணும் போது, எந்த இடத்தில் எந்த தகவல் கூறப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. யூடியூப் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சமானது இரண்டு அல்லது மூன்று நொடிகளுக்கு காணொலியில் எது குறித்து பேசப்படுகிறது என்பதை Timeline ஆக காண்பிக்கும்.
இந்த அம்சத்தினை பயன்படுத்தி, நீண்ட நேர வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து நாம் காண முடியும். தேவையில்லாமல் முழு வீடியோவை பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டி இருக்காது.
யூடியூப் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் எங்கு கொடுக்கப்பட்டிருக்கும்?
நீங்கள் காணும் வீடியோ தலைப்பின் கீழ் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவேண்டும். தொடர்ந்து ‘Show Transcript’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். வீடியோவில் வலது பக்கம் உடனடியாக யூடியூப் டிரான்ஸ்கிரிப்ஷன் டைம்லைன் தோன்றும்.
பிரீமியம் சேவைகளை வழங்க தொடங்கி இருக்கும் யூடியூப், புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேவைகளைப் பயன்படுத்தி பயனர்களை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
PAN அட்டையை Aadhaar உடன் இணைத்துவிட்டீர்களா – இல்லைன்னா பிரச்னை தான்!
சமீபத்தில் கூகுள் தனது வளர்ச்சியில் பெரும் சரிவைக் கண்டது. யூடியூப் பயனர்கள் பலரும் டிக்டாக் செயலி பயன்பாட்டை தேர்வு செய்ததே இதற்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர, கூகுள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
யூடியூப் ஷேர் கிளிப்ஸ்
சில நாள்களுக்கு முன், புதிய ஷேர் கிளிப்ஸ் வசதியை பயனர்களுக்காக அறிமுகம் செய்தது. இந்த வசதி தற்போது சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் சோதனைக்காக ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு காணொலியைக் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் இருக்கும் ஒரு குறுகிய பகுதி மட்டும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதை மட்டும், உங்கள் நண்பர்களுடன் பகிர, மூன்றாம் தரப்பு தளத்தை நாட நேரிடும்.
இந்த குறையை புரிந்து கொண்ட யூடியூப் ‘Clip’ எனும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவில் வரும் உங்களுக்கு பிடித்தமான பகுதியை 60 நொடி கிளிப்பாக நறுக்கி நண்பர்களுக்குப் பகிரலாம்.
மேலும் படிக்க:
முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும்அதிரடி காட்டும் ரஷ்யா – Instagram இஸ் நோ மோர்!YouTube அறிமுகப்படுத்தும் புதிய Share Clips வசதி – எப்படி பயன்படுத்துவது!