மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியான நிலையில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்த முடிவுகளை ரத்து செய்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்து, வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், 2ஆம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்துள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம், இன்று மீண்டும் புதிய ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.