Tamilnadu Ration Employee Update : ரேஷன்கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், மாவட்ட வாரியாக ரேஷன் கடைகளுக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் இறங்கி வரும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் எடையாளர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றன்றனர். இதனால் பல ஊழியர்கள் இரண்டு அல்லது மூன்று ரேஷன் கடைகளை சேர்த்து கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன்கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், மாவட்ட வாரியாக புதிதாக விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் என மொத்தம் 4000 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2020-21 ஆண்டில், மாவட்டவாரியாக ரேஷன்கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், 100 முதல் 200 பேர் வரை ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நியமனம் செய்ய அறிவிக்க்பபட்டு, விண்ணப்பத்தாரரிடம் நேர்காணல் நடத்தி பணியாட்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி அரசியல்வாதிகள் பலரிடம் ரூ5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த திட்டம் நேர்காணல் முடிந்தும் தேர்வானர்கள் பட்டியல் வெளியிடப்படால் நிறுத்தி வைக்கப்பட்டது
தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, இதற்கு முன்பு ரேஷன் கடைகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும். புதிதாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூப்படுகிறது.