சீன பில்லியனர்களின் சொத்து மதிப்பு பெரும் சரிவு.. அச்சத்தில் பணக்காரர்கள்.. ஏன் தெரியுமா?

சீனாவில் கொரோனா மீண்டும் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் சீனாவில் பல முக்கிய தொழில் நகரங்கள் உள்பட பல இடங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த திங்கட்கிழமையன்று சீன பங்கு சந்தையானது பெரும் சரிவினைக் கண்டது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமையன்று 53 பில்லியன் டாலர்களுக்கு மேல் சீன பணக்கார அதிபர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா போனா என்ன, எங்ககிட்ட சீனா இருக்கு.. ரஷ்யாவின் முடிவு..!

ஒரே நாளில் $5 பில்லியன் அவுட்

ஒரே நாளில் $5 பில்லியன் அவுட்

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, சீனாவின் பிரபல நிறுவனத்தின் தலைவரான ஜாங் ஷான்ஷன் ( Zhong Shanshan), அவரது சொத்து மதிப்பில் ஒரே நாளில் 5 பில்லியன் டாலர் இழப்பினை கண்டுள்ளார்.

இதே டென்செண்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் போனி மாவின் சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலர்கள் சரிவினையும் கண்டுள்ளது.

ஒரே நாளில் 10% வீழ்ச்சி

ஒரே நாளில் 10% வீழ்ச்சி

ஹாங்காங் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஷான்ஷனின் Nongfu Spring Co. நிறுவனத்தின் பங்கு விலையானது, கிட்டதட்ட 10% ஒரே நாளில் வீழ்ச்சி கண்டுள்ளது. 18 மாதங்களுக்கு முன்பு பங்கு சந்தைக்கு வந்ததில் இருந்து இந்த நிறுவனம் நல்லதொரு வளர்ச்சியினை கண்டிருந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு 60.3 பில்லியன் டாலராகவும், இதன் மூலம் சீனா பணக்காரர்கள் லிஸ்டிலும் இருந்து வருகின்றார்.

டென்சென்ட் நிறுவனமும் வீழ்ச்சி
 

டென்சென்ட் நிறுவனமும் வீழ்ச்சி

டென்சென்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 8% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. சீனாவின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான டென்சென்ட் பண மோசடி உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு மத்தியில், தொடர்ந்து இப்பங்கின் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. ஒரு காலத்தில் சீனாவின் முக்கிய பணக்காரர்களின் ஒருவராக இருந்த போனி மா, இன்று 35.2 பில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையால் சரிவு

உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையால் சரிவு

உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் தொடர்ந்து பங்கு சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. ஏற்கனவே சில நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையில் சீனாவினை ரஷ்யாவுக்கு உதவிகரமாக அழைப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று சீனா, ரஷ்யாவுக்கு உதவ சென்றால், சீனா நிறுவனங்களும் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். சீன நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் தற்போது கொரோனாவும் சீனாவில் சேர்ந்து கொள்ள நிலையில், உலகின் 500 பணக்காரர்களில் 76 சீன பணக்காரர்கள் 228 பில்லியன் டாலர்களை நடப்பு ஆண்டில் இழந்துள்ளனர். இது அவர்களின் சொத்தில் 5ல் 1 பங்கு ஆகும்.

சீனாவின் பீப்பிள்ஸ் பேங்க்,

சீனாவின் பீப்பிள்ஸ் பேங்க்,

அமெரிக்க பங்கு சந்தை வாரியம் சீனாவின் பீப்பிள்ஸ் பேங்க், Wechat Pay சில சட்டவிரோத நோக்கங்களுக்காக பணப் பரிமாற்றம் செய்ய அனுமதித்துள்ளதை கண்டறிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சீன அரசின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் பல பில்லியன்களை இழந்துள்ள நிலையில், தற்போது மேற்கொண்டு சரிவினைக் காண வழிவகுத்துள்ளது.

ஜாக் மா & ஜாங் யிமிங்

ஜாக் மா & ஜாங் யிமிங்

ஜாங் யிமிங்கின் Bytedance ltd நிறுவனம் சமீபத்திய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் அதன் சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலராக இரண்டாவது இடத்தில் உள்ளது. இதே அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மாவின் சொத்து மதிப்பு 34 பில்லியன் டாலர் மதிப்புடன் 4 வது இடத்திலும் உள்ளார். அலிபாபா நிறுவனமும், ஜாக்மாவும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் கடந்த ஆண்டிலேயே இந்த நிறுவனம் பெரும் சரிவினைக் கண்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china சீனா

English summary

Great loss to China billionaires among various factors of the prevailing crisis

Great loss to China billionaires among various factors of the prevailing crisis/சீன பில்லியனர்கள் சொத்து மதிப்பு பெரும் சரிவு.. அச்சத்தில் பணக்காரர்கள்.. ஏன் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.