ஓடிடி நிறுவனம் ஆரம்பிக்கும் ஷாரூக்கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான் சொந்தமாக ஒரு ஓடிடி நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளார். இந்தியாவில் சில வெளிநாட்டு நிறுவனங்களின் ஓடிடி–க்கள் பிரபலமாக உள்ளன. தெலுங்கில் அல்லு அர்ஜுன் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஒரு ஓடிடி தளம் இருக்கிறது. தற்போது ஷாரூக்கானும் சொந்தமாக ஒரு ஓடிடி நிறுவனம் ஆரம்பிக்க உள்ளார்.
இது பற்றி, “ஓடிடி உலகில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது,” என்ற வார்த்தைகளுடன், 'எஸ்ஆர்கே பிளஸ்' என்ற லோகோவுடன் தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
ஷாரூக்கான் ஏற்கெனவே சொந்த படத் தயாரிப்பு நிறுவனம், ஐபிஎல் கிரிக்கெட் அணி உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார். அவற்றோடு தற்போது ஓடிடி நிறுவனத்தையும் ஆரம்பிக்க உள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2018ல் வெளிவந்த 'ஜீரோ' படத்திற்குப் பிறகு ஷாரூக் நடித்த படம் எதுவும் வரவில்லை. தற்போது 'பதான்' என்ற படத்திலும், தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் ஷாரூக்.
சல்மான் வாழ்த்து
இதனிடையே பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான், “உங்கள் பக்கத்திலிருந்து இன்றைய பார்ட்டி..உங்களின் புதிய ஓடிடிக்கு எனது வாழ்த்துகள்,” என ஷாரூக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.