டெல்லி: 2016 – 2021 வரையிலான நிதியாண்டில் ரூ.26,078 கோடி மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. ரூபாய் நோட்டுகள், நாணயங்களை அச்சடிக்க ரூ.492 கோடி செலவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார்.