வடிவேலு நடிக்கும் `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தொடர்ந்து 15 நாள்கள் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்ப நடந்திருக்கிறது. பெரிய யூனிட்டாய் அங்கே போய் இறங்க அரண்மனையை கலகலத்திருக்கிறது. எல்லாமே வடிவேலை மையமாகக்கொண்ட காமெடிதானாம்.
இயக்குநர் சுராஜ் – வடிவேல் கூட்டணி தான் படத்தின் ஹைலைட். ஷுட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு கொண்டு வந்த டைமிங் ஜோக்குகளையே தனியாகத் தொகுத்துகொண்டு வந்துவிடலாம் என்கிறார்கள். 20 நாட்கள் நீடிக்க வேண்டிய படப்பிடிப்பு 15 நாட்களுக்குள்ளேயே முடிந்துவிட்டதாம். ரொம்ப சந்தோஷமாகவே முடித்து கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார்கள். இதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாகிவிட்டது.
இதற்கடுத்து மூன்றாவது ஷெட்யூல் தாய்லாந்தில் பத்து நாட்கள் நடக்கிறது. படத்தின் ஹைலைட்டே அந்த காட்சிகள்தான் என்கிறார்கள். தாய்லாந்தின் இடங்களை முன்னரே பார்த்து முடித்து விட்டு வந்து விட்டார்கள். வடிவேலின் உச்சகட்ட காமெடிக் காட்சிகளை அங்கேதான் படம் எடுக்கப்போகிறார்கள். அந்த பத்து நாள் படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்தால், சென்னையில் மேலும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கின்றனர். இதுவரைக்கும் வந்த படமாக்குதலில் லைகா நிறுவனம் சந்தோஷமாக இருக்கிறது.
இதுபற்றி இயக்குநர் சுராஜிடம் படப்பிடிப்பு பற்றிப் பேசினேன். ”இது வடிவேலுவுக்கு முக்கியமான படம் என்பதில் எல்லோருக்கும் கவனம் இருக்கிறது போலவே எனக்கும் இருக்கிறது. அவருக்கான எல்லா வகையான காமெடிகளும் சிறப்பாக வந்திருக்கிறது. சிச்சுவேஷன் டயலாக் எழுதுவது முக்கியமில்லை. அது படமாவது தான் முக்கியமான விஷயம் என்று நினைப்பேன். அதுவே சிறப்பாக வந்திருக்கிறது. இதுவரைக்கும் ரொம்பவே திருப்தியாக வந்திருக்கிறது” என்கிறார் இயக்குநர் சுராஜ்.
இப்போது ‘மாமன்னன்’ படத்தில் குதித்து விட்டார் வடிவேலு. அங்கேயும் வில்லேஜ் கெட்டப்பில் நடித்து விட்டு மறுபடியும் ‘நாய் சேக’ராக தாய்லாந்து பறக்கப் போகிறார்.