தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்றார்.
திரைப்படங்களில் புகை பிடிப்பது மது குடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாக கூறி “திரைப்படங்களில் கால் மீது கால் போட்டு ஹீரோக்கள் எப்படி புகை பிடிக்கிறார்கள்” என்பதை நடித்துக் காட்டினார்.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 20 வது பொது நிழல் நிதி அறிக்கையை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட, பெண் பத்திரிகையாளர்கள் பெற்றுக்கொண்டனர்.