பெங்களூரு: ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். ஹிஜாபுக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என்று உயர்நீதிமன்றம் காலையில் தீர்ப்பளித்தது. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.