ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாரும் எதிர்பாராத வகையில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது பல்வேறு விவாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஒரு தரப்பினர் காந்தி குடும்பத்தினர் தலைமை வகிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஐந்து மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக சோனியா காந்தி முன்மொழிந்த கருத்தை தலைவர்கள் புறக்கணித்தனர்.
கட்சியை வலுப்படுத்த சில தொடக்க மாற்றங்களை செய்ய வேண்டும். சோனியா காந்தி தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. மேலும், இது காந்தி குடும்பம் கட்சியில் இருந்து ஒதுங்குவதற்கு வாய்ப்பாக இருக்கும், சோனியா தலைமையின் மீது நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கபில் சிபல் காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமையில் இருந்து விலக வேண்டும். கட்சியின் தலைமை பதவியை ஏற்க சில தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேணடும். தலைமை பாதாளத்தில் உள்ளது. எல்லோருக்குமான காங்கிரசை நான் விரும்புகிறேன். சிலர் அவங்க வீட்டிற்கான காங்கிரஸை விரும்புகிறார்கள்’’ என்று விமர்சனம் செய்திருந்தார்.
கபில் சிபல் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கபில் சிபல் கருத்து குறித்து மாணிக்கம் தாகூர் கூறுகையில் ‘‘பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஏன் காங்கிரசில் இருந்து நேரு-காந்தி குடும்பத்தை தலைமையில் இருந்து விலக விரும்புகிறது? ஏனென்றால், காந்தி குடும்பம் தலைமையில் இல்லாவிட்டால், காங்கிரஸ் ஜனதா கட்சியாகிவிடும். அதன்பின் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கு எளிதாகவிடும். இந்தியாவின் ஐடியாவை அழிப்பதற்கும் எளிதாக இருக்கும். கபில் சிபலுக்கு இது தெரியும். இருந்தாலும், அவர் ஏன் பா.ஜனதா- ஆர்.எஸ்.எஸ். மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார்?’’
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாம் போரிடுவோம். தொடர்ந்து உங்களது குரலை உயர்த்துவோம்’’ என பதிவிட்டுள்ளது.