சத்தியமங்கலம் – இரவு நேர வாகனப் போக்குவரத்து தடைக்கு எதிரான வழக்கின் நிலை என்ன?

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை, முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
award for sathyamangalam tiger resrve: உலக அளவில் சத்தியமங்கலம் புலிகள்  காப்பகத்துக்கு முதல் இடம்… சர்வதேச விருது வழங்கி கௌரவம்! - erode  sathyamangalam tiger reserve got ...

இதனையடுத்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கபட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராடடத்தில் ஈடுபட்டனர். அந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில், ஆறு சக்கரங்களுக்கு மேல் கொண்ட வாகனங்கள் செல்ல மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை தடை விதிக்கலாம் எனவும்,  இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களை இயக்க தடை விதிக்கலாம் எனவும், உள்ளூர் மலை கிராம மக்கள் எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல், உரிய ஆதாரங்களை சரிபார்த்து சாலையில் பயணிக்க அனுமதிக்கலாம், அழுகும் பொருட்களான காய், பழங்கள், பூக்கள், பால் உள்ளிட்ட பொருட்கள் இரவு நேரங்களில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்,  உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என  கேட்டுக் கொண்டார்.
image

மனுதாரர் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர், வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வனப்பகுதி சாலைகளை விரிவுபடுத்த அனுமதிக்க கூடாது, போக்குவரத்துகளை  கட்டுப்படுத்துவது, வேக கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்டவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,  இந்த பகுதியில் 45 தனியார் தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

இடையீட்டு மனுதாரரான முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மலைகிராம மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 45 தங்கும் விடுதிகளின் விவரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.