இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்திலேயே காணப்பட்டது.
எனினும் மீண்டும் தற்போது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் மீதான தாக்குதலை வேகப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் நேட்டோ நாடுகளை எச்சரித்துள்ளது.
அதில் ரஷ்ய படைகள் போலந்து எல்லை வரையில் தாக்குதலை நடத்தி வருகின்றன. அடுத்ததாக போலந்தினை கூட ரஷ்யா தாக்கலாம் என உக்ரைன் அதிபர் எச்சரித்துள்ளார். அப்படி ஏதேனும் நடந்தால் நேட்டோ நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கலாம். இதனால் இது மூன்றாவது உலகப்போராகவே உருவெடுக்கலாம். மொத்ததில் பிரச்சனை தொடர்ந்து வளர்ச்சி கண்டு கொண்டே தான் சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரபர தேர்தல் முடிவுகள்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. மெட்டல்ஸ், ஆட்டோ பங்குகள் கவனம்!
சர்வதேச சந்தைகள்
அமெரிக்காவின் பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சில குறியீடுகள் ஏற்றத்திலும், சிலவை சரிவிலும் முடிவடைந்துள்ளன. இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் தொடக்கத்தில் ஏற்றத்தில் காணப்பட்டாலும் தற்போது மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
மார்ச் 14 நிலவரப் படி, 176.52 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 1098.62 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், அது சற்று குறைந்துள்ளது. இது தான் மார்ச் மாதத்தில் வெளியான மிக குறைந்த அன்னிய முதலீடாகும்.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 354.48 புள்ளிகள் அதிகரித்து, 56,840.50 புள்ளிகளாகவும், நிஃப்டி 63.40 புள்ளிகள் அதிகரித்து, 16,934.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 223.36 புள்ளிகள் அதிகரித்து, 56,709.38 புள்ளிகளாகவும், நிஃப்டி 52.90 புள்ளிகள் அதிகரித்து, 16,924.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1459 பங்குகள் ஏற்றத்திலும், 439 பங்குகள் சரிவிலும், 64 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியிடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் 2% மேலாக சரிவிலும், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ 1% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், சிப்லா, மாருதி சுசுகி, எம்& எம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, எம் & எம்,அல்ட்ராடெக் சிமெண்ட் , ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், கோடக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 10.10 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 14.51 புள்ளிகள் குறைந்து, 56,471.51 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.25 புள்ளிகள் குறைந்து, 16,866.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex, nifty trade struggling amid ukriane – russia tension
opening bell: sensex, nifty trade struggling amid ukriane – russia tension /கரடியின் பிடியில் சிக்கியுள்ள காளை.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. தொடரும் ஏற்ற இறக்கம்..ஏன்!