மதுரை மாவட்டம் பொட்டபாளையத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிடாமுட்டு போட்டி நடத்தப்பட்டது.
மந்தையம்மன் கோயிலில் பங்குனி பெருவிழாவுடன், சிறப்பு அம்சமாக கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், அதன் ஒருபகுதியாக கிடாமுட்டு போட்டி நடைபெற்றது.
இதில், 120 கிடாக்கள் பங்கேற்ற நிலையில், 10 ஜோடிகள் வீதம், 6 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கு குத்துவிளக்கு, பொங்கல் பானை, கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன.