நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிடுமாறு ஆளுநர் ஆன்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2021 – 22 ஆம் கல்வியாண்டு முடிவுக்கு வந்து, 2022 – 23ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்ட முன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என்று ஆளுநரிடம் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் உறுதி அளித்ததாக தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM