பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள்
லக்ஷ்மி மஞ்சு
. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவின் ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைக்கான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் லக்ஷ்மி மஞ்சு. அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்தப்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் 2018 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இதில் மரியா என்ற கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் லக்ஷ்மி மஞ்சு தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மஞ்சு தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்து மிரள வைத்துள்ளார்.
களரி
வித்தையின்
யானை போஸ்
என எந்த பிடிமானமும் இல்லாமல் நிற்கும் தனது தொடை மீது ஒரு நபர் ஏறி நிற்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
View this post on Instagram A post shared by Lakshmi Manchu (@lakshmimanchu)
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் என்றும் செம கெத்து என்றும் பதிவிட்டு வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் நடிகை லக்ஷ்மி மஞ்சு ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!
———-
Sonia Agarwal’s latest pics goes viral on social media
sonia agarwal, sonia agarwal photos, actress Sonia agarwal, சோனியா அகர்வால், சோனியா அகர்வால் போட்டோஸ், நடிகை சோனியா அகர்வால்
நாளுக்கு நாள் கூடும் அழகு… செல்வராகவனின் மாஜி மனைவி போட்டோஸ்!
செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த சோனியா அகர்வால் அவரை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.