மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருமலை கொழுந்து புரம் பகுதியை சேர்ந்தவர் மாதா. இவர் வீட்டின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
ஆனால், அவரை எங்கும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள முட்புதரில் அரை நிர்வாணமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் ராதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.