“கேப்டன் மாதிரியா நீங்க இருக்கீங்க” – ஆஸ்திரேலிய கேப்டன் செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்



பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

கராச்சியில் நடந்து வரும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 148 ரன்களில் சுருண்டது. 

பின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 97 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்ய பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  4வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் உள்ள நிலையில் கைவசம் 8 விக்கெட் உள்ளதால் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவையான 314 ரன்களை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் மோசமாக உள்ளதால் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தின் பந்துவீச்சாளர்கள் கால் பதிக்கும் இடத்தில் ஆடுகளம் சரிவரவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர்கள் புகார் செய்தனர். இதனையடுத்து நடுவர்கள் மைதான ஊழியரை அழைத்து அதனை சரி செய்யும் படி கூறினார். ஆனால் பாகிஸ்தான் ஊழியர் செய்த பணி திருப்திகரமாக இல்லை என கூறப்படுகிறது. 

உடனடியாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், சுத்தியலை வாங்கி களத்தை அடித்து அதனை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.